/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
ADDED : பிப் 02, 2024 04:05 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தாலுகாவில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' சிறப்பு திட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.
உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை தொடர்பாகவும், மருத்துவமனையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின், அரசு ஐ.டி.ஐ., மாணவர் விடுதியில் மாணவர் தங்கும் அறை, கழிவறைகள் மற்றும் சமையல் கூடங்களை ஆய்வு செய்தார். அப்போது போதிய மின் விளக்குகள், அறைகளில் கொசு வலை ஏற்படுத்திக் கொடுக்க அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், வேலுார் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தனலட்சுமி, இணை இயக்குனர் ராமு, உளுந்துார்பேட்டை தாசில்தார் விஜயபிரபாகரன், நகராட்சி கமிஷனர் இளவரசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.