UPDATED : நவ 17, 2025 05:20 PM
ADDED : செப் 27, 2025 02:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக காங்கிரஸ்., தலைவர் செல்வபெருந்தகை குறித்து அவதுாராக பேசிய அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமியை கண்டித்து, சங்கராபுரம் கடை வீதி மும்முனை சந்திப்பில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட காங்., துணை தலைவர் இதயதுல்லா தலைமை தாங்கினார். நகர தலைவர் கோவிந்தராஜ், வட்டார தலைவர் பிரபு, சிறுபான்மை பிரிவு வட்டார தலைவர் நவாஸ்கான், மாணவர் காங்., மாவட்ட தலைவர் முகமது, வக்கில் பாஷா, காத்தவராயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

