/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உரக்கழிவு கட்டடம் கட்டும் பணி போலீஸ் பாதுகாப்புடன் துவக்கம்
/
உரக்கழிவு கட்டடம் கட்டும் பணி போலீஸ் பாதுகாப்புடன் துவக்கம்
உரக்கழிவு கட்டடம் கட்டும் பணி போலீஸ் பாதுகாப்புடன் துவக்கம்
உரக்கழிவு கட்டடம் கட்டும் பணி போலீஸ் பாதுகாப்புடன் துவக்கம்
ADDED : செப் 25, 2025 11:44 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், அம்பேத்கர் நகர் பகுதியில் தடைபட்டிருந்த உரக்கழிவு கட்டடம் கட்டும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கியது.
திருக்கோவிலுார், சந்தைப்பேட்டை, அம்பேத்கர் நகர் பகுதியில், திடக்கழிவு மேலாண்மை செயல்திட்டத்தின் கீழ், உரக்கழிவு கட்டடம் கட்டுவதற்கு நகராட்சி நடவடிக்கை எடுத்தது. அப்போது அப்பகுதி மக்கள் உரக்கழிவு திட்டம் செயல்படுத்தப்பட்டால், துர்நாற்றம் வீசுவதுடன், குடியிருப்போருக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இதனை கைவிடுமாறு தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், தனிநபர் ஒருவர் இது தனக்கு சொந்தமான இடம் என உரிமை கோரியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஆர்.டி.ஓ., ஆனந்த் குமார் சிங் தலைமையில் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அந்த இடம் நகராட்சிக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து நேற்று டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். நகராட்சி கமிஷனர் திவ்யா, பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் முன்னிலையில், நகராட்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரர் மூலம் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அப்பகுதியில் இருந்த நகராட்சிக்கு சொந்தமான பழைய கட்டடங்கள், இடித்து அகற்றப்பட்டு பணிகள் துவங்கியது. இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.