/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதை குழியில் விழுந்த பசு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
/
புதை குழியில் விழுந்த பசு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
புதை குழியில் விழுந்த பசு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
புதை குழியில் விழுந்த பசு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
ADDED : ஜூன் 14, 2025 10:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் புதை குழியில் விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
தேவனுார் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் பசு மாடு மேய்ந்து கொண்டிருந்து.
அப்போது, ஆற்றின் கரையோரத்தில் இருந்த 5 அடி ஆழ புதை குழியில் விழுந்தது. மாட்டின் கழுத்து மட்டுமே வெளியில் தெரிந்தது. இதனைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் வினாயகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணிநேரம் போராடி 6:00 மணிக்கு பசுவை உயிருடன் மீட்டனர்.