/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 21, 2024 05:00 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க நிர்வாகி சாவித்திரி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மேரி, சுப்பம்மாள், மாரியம்மாள், கமலா, மனோன்மணி முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு பென்ஷன் 6,750 ரூபாய் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில், தகுதி வாய்ந்த சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் நியமித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, சம்பத்குமார், கருணாநிதி, கலியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக பஸ் நிலையத்தில் இருந்து துவங்கி கலெக்டர் அலுவலகம் முன் முடிந்த ஊர்வலத்தை, ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஜார்ஜ் வாஷிங்டன் துவக்கி வைத்தார்.

