/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பி.எம்., கிசான் திட்டத்தில் தவணைத் தொகை பெற இ.கே.ஒய்.சி., - ஆதார் எண் இணைப்பு அவசியம்
/
பி.எம்., கிசான் திட்டத்தில் தவணைத் தொகை பெற இ.கே.ஒய்.சி., - ஆதார் எண் இணைப்பு அவசியம்
பி.எம்., கிசான் திட்டத்தில் தவணைத் தொகை பெற இ.கே.ஒய்.சி., - ஆதார் எண் இணைப்பு அவசியம்
பி.எம்., கிசான் திட்டத்தில் தவணைத் தொகை பெற இ.கே.ஒய்.சி., - ஆதார் எண் இணைப்பு அவசியம்
ADDED : ஜன 23, 2024 04:55 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பி.எம்., கிசான் திட்டத்தில் பயனடைய இ.கே.ஒய்.சி., விபரங்களை பதிவேற்றம் செய்யவும், ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்குமாறும் கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் பி.எம்., கிசான் திட்டத்தின் 4 அல்லது அதற்கு குறைவான ஏக்கர் பரப்பளவு விளை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 15 தவணை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 85 ஆயிரத்து 18 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் வழிகாட்டுதல்படி தொடர்ந்து தவணைத் தொகை பெற இ.கே.ஒய்.சி., பதிவேற்றம் மற்றும் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 10 ஆயிரத்து 49 விவசாயிகள் இ.கே.ஒய்.சி., பதிவேற்றம் செய்யாமலும், 5,894 பேர் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்காமலும் உள்ளனர்.
எனவே, விவசாயிகள், பி.எம்., கிசான் வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, ஓ.டி.பி., மூலம் சரிபார்ப்பு செய்து கொள்ளவும். அல்லது பி.எம்., கிசான் செயலியில் முக அடையாளம் கொண்டும், கண் சிமிட்டல் மூலமும் இ.கே.ஒய்.சி., செய்யலாம்.
அதேபோல், வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்காத விவசாயிகள் உடனடியாக இணைக்க வேண்டும். இப்பணிகளை முடித்தால் மட்டுமே பி.எம்., கிசான் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற முடியும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

