ADDED : ஜூன் 25, 2025 08:14 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
சென்னை, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையுடன் சாரதா வித்யாஷ்ரம் பள்ளி இணைந்து இரண்டு மாதங்களுக்கு முன் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.
முகாமில் பங்கேற்ற பலர் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். மேலும் பலர் தொடர் சிகிச்சைக்கும் அறிவுறுத்தப்பட்டனர். இவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி நிர்வாக தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். தாளாளர் பிரபு முன்னிலை வகித்தார். சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சிறப்பு டாக்டர் கலையரசி தலைமையிலான குழுவினர், பரிசோதனை செய்து, கண் கண்ணாடி, மருந்து, மாத்திரைகள் வழங்கினர். முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மீனாட்சி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.