/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நீர் நிலைகளில் சிறுவர்கள் குளிப்பதால்... அச்சம்; உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை தேவை
/
நீர் நிலைகளில் சிறுவர்கள் குளிப்பதால்... அச்சம்; உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை தேவை
நீர் நிலைகளில் சிறுவர்கள் குளிப்பதால்... அச்சம்; உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை தேவை
நீர் நிலைகளில் சிறுவர்கள் குளிப்பதால்... அச்சம்; உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை தேவை
ADDED : மார் 25, 2025 09:34 PM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையில் அணைகள், ஏரிகள், குளம் மற்றும் ஆறுகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிந்தது.
நீர் நிலைகள் தேங்கியுள்ள தண்ணீரில் இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள் பலர் குளித்து வருகின்றனர்.
கடந்தாண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் குளித்த சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒரு சிலர் நீரில் மூழ்கி இறந்தனர்.
அதேபோல், தற்போதும் விடுமுறை நாட்களில் நீர் நிலைகளில் குளிக்கும் சிறுவர்கள் நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
கடந்த 23 ம் தேதி சடையம்பட்டு தடுப்பணையில் குளித்த 11ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.கிராமப் புறங்களில் உள்ள நீர் நிலைகளில் சிறுவர்கள் பலர் ஆபத்தை உணராமல் பாதுகாப்பற்ற முறையில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
குறிப்பாக பல நீர் நிலைகளில் சகதிகள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது.
இந்த நீர் நிலைகளில் சிறுவர்கள் உயரமான இடங்களில் இருந்தும், உயர்ந்த மரக்கிளைகளிலிருந்தும் தண்ணீரில் குதித்து நீந்தி விளையாடி மகிழ்கின்றனர்.
சிலர் ஆபத்தை உணராமல் அதிகளவு ஆழம், பாறை இடுக்கு, சேரும் சகதியும் மிகுந்த பகுதியில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
சில நேரங்களில் ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று சிறுவர், சிறுமிகள் இறந்து போகும் துயரமான சம்பவங்கள்நிகழ்கிறது. தற்போது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வெயிலுக்கு இதமாக கிணறு, ஆற்றின் தடுப்பணைகள், ஏரிகள், குளங்களில் குளித்து வருகின்றனர்.
விரைவில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படவுள்ளது. எனவே நீர் நிலைகளில் குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.