/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பணியின் போது போதையில் இருந்த முதல் நிலைக் காவலர் 'சஸ்பெண்ட்'
/
பணியின் போது போதையில் இருந்த முதல் நிலைக் காவலர் 'சஸ்பெண்ட்'
பணியின் போது போதையில் இருந்த முதல் நிலைக் காவலர் 'சஸ்பெண்ட்'
பணியின் போது போதையில் இருந்த முதல் நிலைக் காவலர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜன 23, 2024 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் மதுபோதையில் பணியில் ஈடுபட்ட முதல்நிலை காவலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் சுதாகர், 32; இவர் கடந்த 21ம் தேதி இரவு பணியில் இருந்தபோது மது போதையில் இருந்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.பி.,க்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் துறை ரீதியாக விசாரணை நடத்தியதில் சுதாகர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சுதாகரை 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., சமய்சிங் மீனா உத்தரவிட்டார்.