/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எஸ்.ஐ.ஆர்., சந்தேகங்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறையை அணுகலாம்
/
எஸ்.ஐ.ஆர்., சந்தேகங்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறையை அணுகலாம்
எஸ்.ஐ.ஆர்., சந்தேகங்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறையை அணுகலாம்
எஸ்.ஐ.ஆர்., சந்தேகங்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறையை அணுகலாம்
ADDED : டிச 01, 2025 04:58 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர்., தொடர்பான சந்தேகங்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4ம் தேதி முதல் நடந்து வருகிறது.
பணிகள் வரும் டிச.11ம் தேதி நிறைவு பெற உள்ளது. கணக்கீடடுப் படிவங்களை சம்மந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்காத வாக்காளர்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகங்களுக்கு கலெக் டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்.1950, சட்டசபை தொகுதிகள் உளுந்தூர்பேட்டை - 04149- 222255, ரிஷிவந்தியம் - 04151- 235400, சங்கராபுரம் - 04151- 235329, கள்ளக்குறிச்சி (தனி)-04151-222449 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.