/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பஸ் - ஆட்டோ மோதல் டிரைவர் பலி: 9 பேர் காயம்
/
அரசு பஸ் - ஆட்டோ மோதல் டிரைவர் பலி: 9 பேர் காயம்
ADDED : ஜன 21, 2024 04:58 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதில் ஆட்டோ டிரைவர் இறந்தார். 9 பேர் படுகாயமடைந்தனர்.
தியாகதுருகம் அடுத்த செம்பியன்மாதேவி புது காலனியைச் சேர்ந்த முருகன், 60; ஆட்டோ டிரைவர். இவர், கடந்த நேற்று முன்தினம் மதியம் தாரணாபுரி கிராமத்திலிருந்து ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி சென்றார்.
தாரணாபுரி அருகே சென்றபோது, சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற அரசு பஸ் ஆட்டோ பின்னால் மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்ததில் தலையில் படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஆட்டோவில் பயணம் செய்த தாரணாபுரி தருண், 41; மல்லிகா, 45; சின்னப்பொண்ணு, 50; அஞ்சலை, 39; சீதா, 29; வெற்றிவேல், 13; வேல்முருகன், 35; பிரேம்குமார், 48; சந்தியா, 29; ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

