/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் இந்து அமைப்பினர் கைது
/
கள்ளக்குறிச்சியில் இந்து அமைப்பினர் கைது
ADDED : ஜன 23, 2024 05:31 AM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி கோவில்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்பவும், சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்த இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்து, விடுவித்தனர்.
கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை கங்கையம்மன் கோவில் முன், ராமர் கோவில் கும்பாபிேஷக விழாவை 'டிவி' வைத்து நேரலையில் ஒளிபரப்பவும், அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தவும் இந்து அமைப்பினர் நேற்று முன்தினம் இரவு ஏற்பாடு செய்தனர்.
இதற்கு போலீசார் தடை விதித்து பணிகளை நிறுத்தியதோடு, பிற பகுதியில் நடத்தவும் தடை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கங்கையம்மன் கோவில் செயலாளர் அரவிந்தன், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட கொள்கை பரப்ப்பு செயலாளர் நாராயணன் உள்ளிட்ட 10 பேர் நேற்று காலை, டி.எஸ்.பி., ரமேஷை சந்தித்து, ராமர் கோவில் கும்பாபிஷேக சிறப்பு வழிபாட்டிற்கு அனுமதி கோரினர்.
அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக வழிபாட்டிற்கு தடை விதிக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அனைவரும் காலை 10:30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

