/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காஸ் கசிவால் வீடு தீ பிடித்து சேதம்
/
காஸ் கசிவால் வீடு தீ பிடித்து சேதம்
ADDED : ஜன 19, 2024 07:29 AM
கள்ளக்குறிச்சி : ஈயனுாரில் காஸ் கசிவால் வீடு தீ பிடித்து எரிந்து சேதமடைந்தது.
ஈயனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி, 55; கூலித்தொழிலாளி. இவரது மனைவி திலகவதி நேற்று காலை 7:30 மணியளவில் வீட்டில் காஸ் அடுப்பில் சமைத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென காஸ் கசிவு ஏற்பட்டு, தீ பரவி வீட்டிலிருந்த பொருட்கள் எரியத்தொடங்கின. அக்கம், பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயிணை அணைக்க முயன்றனர். அதற்குள் வீட்டிலிருந்த மின்சாதனங்கள், அரிசி, உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி முற்றிலுமாக சேதமடைந்தன.
இதில் லேசான தீக்காயமடைந்த மண்ணாங்கட்டி சிகிச்சைக்காக ஈயனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

