/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்லை தமிழ் சங்கத்தில் இலக்கிய சொற்பொழிவு
/
கல்லை தமிழ் சங்கத்தில் இலக்கிய சொற்பொழிவு
ADDED : ஜன 23, 2024 04:35 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கல்லைத் தமிழ்ச் சங்க இலக்கிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
சங்கத்தின் சிறப்புத் தலைவர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார். திருக்குறள் பேரவைத் தலைவர் லட்சுமிபதி முன்னிலை வகித்தார். கல்லைத் தமிழ்ச் சங்க செயலாளர் மதிவாணன் வரவேற்றார். திருக்குறள் அதிகாரம் குறித்து டாக்டர் செல்வரங்கம் விளக்கவுரை வழங்கினார்.
அகில இந்திய அளவிலான தலைசிறந்த முதல் நிலை நவீன அரிசி ஆலைக்கான விருது பெற்ற சுலைமானுக்கு, கவிஞர் கோவிந்தராஜன் பாராட்டுரை வழங்கினார். துணைத் தலைவர் அம்பேத்கர், புதுச்சேரி கலால், சுங்கத்துறை உதவி ஆணையர் சண்முகசுந்தரம் ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கினர். சங்க காப்பாளர் டாக்டர் உதயகுமார் வாழ்த்திப் பேசினார்.
சங்க காலத்து உயரிய தமிழர் பண்பாடுகளை, இக்கால இளைஞர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் நாமக்கல் பெருமாள் முருகன் பேசினார்.
நிகழ்ச்சியில் கவிஞர்கள் ஆசுகவி ஆராவமுதன், ராமானுஜன், நாராயணசாமி, நல்லாப்பிள்ளை, சின்னப்பத்தமிழர், காசிம், சங்கர், நெடுஞ்செழியன், இளையாப்பிள்ளை, அருள்ஞானம், சிவப்பிரகாசம், அப்துல்கரீம் உட்பட பலர் பங்கேற்றனர்.

