/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
12 ஆண்டுக்கு பின் பூட்டை மாரியம்மன் வீதியுலா
/
12 ஆண்டுக்கு பின் பூட்டை மாரியம்மன் வீதியுலா
ADDED : ஜன 21, 2024 04:58 AM
சங்கராபுரம்: தியாகராஜபுரத்தில் பூட்டை மாரியம்மன் 12 ஆண்டுகளுக்குப்பின் வீதியுலா நடந்தது.
பூட்டை அடுத்த தியாகராஜபுரம் கிராமத்திற்கு ஆண்டுதோறும் தை மாதம் பூட்டை மாரியம்மன் சிலையை கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வீதியுலா செல்வது வழக்கம்.
கடந்த 12 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மாரியம்மன் சிலை தியாகராஜபுரம் கிராமத்திற்கு கொண்டு செல்வது நிறுத்தப்பட்டது.
தற்போது, தியாகராஜபுரம் ஊராட்சி தலைவர் சங்கரன் முயற்சியின் பேரில் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.
இதையொட்டி கடந்த 19ம் தேதி மாரியம்மன் சிலை தியாகராஜபுரம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
பின் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. 12 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அம்மன் வீதியுலா நடந்ததால் தியாகராஜபுரம் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

