ADDED : ஜூலை 02, 2025 07:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த பாலப்பட்டு வே பிரிட்ஜ் அருகே இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது எதிரே வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்தபோது, அதில் அனுமதியில்லாமல் ஆற்று மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது.
லாரியில் வந்த சங்கராபுரம் கண்ணன் மகன் சின்னபையன், 52; எஸ்.வி.பாளையம் மயில்வாகனன் மகன் ஜானகிராமன், 36; ஆகியோரை கைது செய்து 3 யூனிட் மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.