
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், இந்தியன் வங்கி பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி சஞ்சீவி மருத்துவமனை, நேரு கண் மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவ மையம் சார்பில் நடந்த முகாமிற்று, கள்ளக்குறிச்சி கிளை மேலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். உதவி கிளை மேலாளர் கமலேஷ் வரவேற்றார். நேரு கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் நேரு, டாக்டர் கீர்த்தனா, அகர்வால் கண் மருத்துவ மைய டாக்டர் ஜேக்கப், சஞ்சீவி மருத்துவமனை டாக்டர்கள் நந்தினி, ரமேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.
கள்ளக்குறிச்சி, விளம்பார், கச்சிராயபாளையம், சூளாங்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், சின்னசேலம், ஆலத்துார் உள்ளிட்ட இந்தியன் வங்கியின் 23 கிளைகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.
முகாமில், ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், இ.சி.ஜ., கண் பார்வை குறைபாடுகள், கேட்ராக்ட் உள்ளிட்டவைகள் குறித்து பரிசோதிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக இந்தியன் வங்கி கடலுார் மண்டல மேலாளர் கவுரிசங்கர் ராவ் மற்றும் கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கி உதவி மேலாளர்கள் பிரவீன்குமார், தேவகுமார் பங்கேற்றனர்.

