/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நுண்ணீர் பாசனம் சிறப்பு முகாம்கள்
/
நுண்ணீர் பாசனம் சிறப்பு முகாம்கள்
ADDED : ஜன 24, 2024 04:19 AM
கள்ளக்குறிச்சி : திருக்கோவிலுார் ஒன்றியத்தில் வேளாண் துறை சார்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
திருக்கோவிலுார் வேளாண் துறை உதவி இயக்குனர் கிருஷ்ணகுமாரி செய்திக்குறிப்பு:
திருக்கோவிலுார் ஒன்றியத்தில் 370 எக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வரும் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
முகாமில் இதுவரை அரசு மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்காத சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் சொட்டு நீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடிவடைந்த விவசாயிகள் பழைய நுண்ணீர் பாசன அமைப்பை நீக்கம் செய்து, மானிய திட்டத்தில் புதிதாக அமைத்துக் கொள்ளலாம். ஆதார், ரேஷன் கார்டு, அடங்கல், நில வரை படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
இதுபோல சிறு, குறு அல்லாத பெரிய விவசாயிகள் 75 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்துக் கொள்ளலாம். கூட்டுப்பட்டாவில் உள்ள விவசாயிகள் பட்டாவில் உள்ள இதர விவசாயிகளிடமிருந்து தடையில்லா சான்று 20 ரூபாய் பத்திரத்தில் அளித்து பயன்பெறலாம்.
எனவே, இதுவரை நுண்ணீர் பாசனம் அமைக்காத விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் திருக்கோவிலுார் வேளாண்மைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

