/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக்கூட்டம்
/
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக்கூட்டம்
ADDED : அக் 15, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
தாசில்தார் வைரக்கண்ணன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கோபாலகிருஷ்ணன், தலைமையிடத்து துறை தாசில்தார் செங்குட்டுவன், மண்டல துணை தாசில்தார் பாண்டியன் முன்னிலை வகித்தனர். எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின்போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தாசில்தார் வைரக்கண்ணன் விளக்கி கூறினார். கூட்டத்தில் மின்சாரம், போலீஸ், நெடுஞ்சாலை, தீயணைப்பு, பொதுப்பணித்துறை அதிகாரிகள், வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

