/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: 'குண்டாசில்' தந்தை, மகன் கைது
/
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: 'குண்டாசில்' தந்தை, மகன் கைது
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: 'குண்டாசில்' தந்தை, மகன் கைது
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: 'குண்டாசில்' தந்தை, மகன் கைது
ADDED : ஜன 23, 2024 05:32 AM

கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டையில் தனது வீட்டிற்கு, தானே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தந்தை, மகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை கேசவன் நகரைச் சேர்ந்தவர் செந்தில், 46; அகில பாரத இந்து மகாசபா அமைப்பின் மாநில பொதுச் செயலாளர். கடந்த டிசம்பர் 23ம் தேதி செந்தில் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதுகுறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், செந்தில் மற்றும் அவரது மகன் சந்துரு, 24; ஆகிய இருவரும் சென்னையை சேர்ந்த மாதவன் என்பவர் மூலம் பெட்ரோல் குண்டு வீசியது தெரிந்தது.
அதன்பேரில் மூவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், செந்தில் மற்றும் அவரது மகன் சந்துரு ஆகிய இருவரும் ஜாமினில் வெளியே வந்தால் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதனால், அவர்களது நடவடிக்கையைத் தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., சமய்சிங்மீனா பரிந்துரையை ஏற்று, செந்தில், சந்துரு ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகல், கடலுார் மத்திய சிறையில் உள்ள செந்தில் மற்றும் சந்துருவிடம் உளுந்துார்பேட்டை போலீசார் நேற்று வழங்கினர்.

