/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரியில் வாலிபர் உடல் போலீஸ் விசாரணை
/
ஏரியில் வாலிபர் உடல் போலீஸ் விசாரணை
ADDED : ஜன 19, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி ஏரியில் அடையாளம் தெரியாத வாலிபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி பெரிய ஏரியில் கடந்த 17ம் தேதி மாலை 6:00 மணிக்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் அழுகிய நிலையில் மிதந்தது.
கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார், ஏரியில் இருந்து உடலை மீட்டு, இறந்த வாலிபர் யார் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

