/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
/
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED : ஜன 09, 2024 10:37 PM

கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது.
கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில்களில் பிரதோஷ வழிபாட்டையொட்டி நந்திகேஸ்வரருக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதேபோல் சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர், நீலமங்கலம் மற்றும் கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு ஏகாம்பரேஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனுார் மற்றும் தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், கூத்தக்குடி விருத்தகிரீஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம், நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் மற்றும் பஞ்சாட்சரநாதர் உடனான திருமூலசித்தநாதர், கனியாமூர் கனகசோளீஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
அதேபோல் ரிஷிவந்தியம் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

