/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
ADDED : செப் 20, 2025 07:13 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி துவங்கி செப்டம்பர் 10ம் தேதி வரை நடந்தது. இதில் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளின் கீழ் நடந்தது. போட்டிகளில் பங்கேற்க 25 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 22 ஆயிரம் பேர் வரை போட்டிகளில் பங்கேற்றனர்.
போட்டிகளில் அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து தேர்வு பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கும் விழா , பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழா நடந்தது.
இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த விழாவில் கலெக்டர் பிரசாந்த், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினர்.
விழாவில் மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகுடமுடி, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

