/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி
/
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி
ADDED : ஜன 09, 2024 10:36 PM

கள்ளக்குறிச்சி, - கள்ளக்குறிச்சியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 9 -பிளஸ் 2 வகுப்பு பள்ளி மாணவர்களிடையே மாவட்ட அளவிலான வினாடி - வினா போட்டி நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த வினாடி வினா போட்டி நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். ஒரு குழுவிற்கு 2 மாணவர்கள் வீதம் போட்டியில் 7 பள்ளிகளில் இருந்து 14 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்தல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பள்ளி 10ம் வகுப்பு மாணவன் ராஜபார்த்திபன், மாணவி ரிஷிகா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் செம்மொழிதாசன், தமிழன்பன் ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேசிய வாக்காளர் தினத்தில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
மேலும் போட்டியில் முதல் இரு இடங்களை பிடித்த மாணவர்கள் குழு மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, தனி தாசில்தார்(தேர்தல்) பசுபதி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சவிதா உட்பட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

