ADDED : பிப் 02, 2024 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் தட்சணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடந்தது.
அதனையொட்டி மூலவருக்கு காலசந்தி பூஜை நடத்தியபின், நவகிரகங்களில் உள்ள குரு பகவானுவுக்கும், தட்சணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமிகளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது. தோஷங்கள் நீங்க பக்தர்கள் கொண்டை கடலை மாலை அணிவித்து நெய் தீபங்கள் ஏற்றி, வழிபாடு நடத்தினர். பூஜைகளை அர்ச்சகர் அம்பிகேஸ்வர குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

