/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உள்ளாட்சி அமைப்புகளில் தற்செயல் தேர்தல் மாநிலத் தேர்தல் ஆணையர் ஆய்வு
/
உள்ளாட்சி அமைப்புகளில் தற்செயல் தேர்தல் மாநிலத் தேர்தல் ஆணையர் ஆய்வு
உள்ளாட்சி அமைப்புகளில் தற்செயல் தேர்தல் மாநிலத் தேர்தல் ஆணையர் ஆய்வு
உள்ளாட்சி அமைப்புகளில் தற்செயல் தேர்தல் மாநிலத் தேர்தல் ஆணையர் ஆய்வு
ADDED : ஜன 14, 2024 04:59 AM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு, தற்செயல் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஷ்ரவன்குமார், எஸ்.பி., சமய்சிங்மீனா முன்னிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் உள்ளாட்சி அமைப்புகளில் தற்செயல் தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது, மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் காலியாக உள்ள கிராம வார்டு உறுப்பினர், துணைத் தலைவர், தலைவர், ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்களின் எண்ணிக்கை, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் காலியாக உள்ள கவுன்சிலர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, காலி பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பழுதடைந்த ஓட்டுப் பெட்டிகளை தயார் செய்து வைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் செலவின கணக்குகள் தொடர்பாகவும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
டி.ஆர்.ஓ., சத்திநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமார், மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளிதரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரத்தினமாலா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

