/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிணற்றில் விழுந்து விவசாயி பலி
/
கிணற்றில் விழுந்து விவசாயி பலி
ADDED : ஜன 19, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே கிணற்றில் விழுந்து விவசாயி இறந்தார்.
அரசம்பட்டைச் சேர்ந்தவர் கோவிந்தன், 45; விவசாயி. இவர், நேற்று முன் தினம் காலை மாட்டுக்கு புல் அறுக்க வயலுக்குச் சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று காலை அதே ஊரை சேர்ந்த சரவணன் என்பவரது விவசாய கிணற்றின் அருகே புல் கட்டு இருந்துள்ளது. கிணற்றில் பார்த்தபோது, கோவிந்தன் நீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. தீயணைப்பு வீரர்கள் நேரில் சென்று கிணற்றுக்குள் இருந்த கோவிந்தன் உடலை நேற்று காலை மீட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்துவிசாரித்து வருகின்றனர்.

