/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்... 11.08 லட்சம் ; கலெக்டர் இறுதி பட்டியல் வெளியீடு
/
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்... 11.08 லட்சம் ; கலெக்டர் இறுதி பட்டியல் வெளியீடு
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்... 11.08 லட்சம் ; கலெக்டர் இறுதி பட்டியல் வெளியீடு
மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்... 11.08 லட்சம் ; கலெக்டர் இறுதி பட்டியல் வெளியீடு
ADDED : ஜன 23, 2024 05:02 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கலெக்டர் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் 11 லட்சத்து 8 ஆயிரத்து 775 பேர் இடம் பெற்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
கடந்த அக்டோபர் , மாதம் 27ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி மாவட்டத்தில் 10 லட்சத்து 90 ஆயிரத்து 21 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
அதன் பிறகு திருத்தப்பணிகள் நடந்ததில், இறந்தவர்கள், குடிபெயர்ந்த வர்கள், இரு இடங்களில் பெயர் பதிவு என்ற அடிப்படையில் மொத்தம் 9,211 பேர் நீக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 47 ஆயிரத்து 449 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 45 ஆயிரத்து 409 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 2,040 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
தற்போது நடந்த சிறப்பு சுருக்க திருத்தப்பணியில் 12 ஆயிரத்து 564 ஆண்கள், 15 ஆயிரத்து 386 பெண்கள், 15 இதரர் என மொத்தம் 27 ஆயிரத்து 965 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 5 லட்சத்து 54 ஆயிரத்து 822 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 53 ஆயிரத்து 717 பெண் வாக்காளர்கள் இதரர் 236 பேர் என 11 லட்சத்து 8,775 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், ஆர்.டி.ஓ.,க்கள் கிருஷ்ணன், கண்ணன், தேர்தல் தனி தாசில்தார் பசுபதி மற்றும் தாசில்தார்கள் உடனிருந்தனர்.
இந்த புதிய வாக்காளர் பட்டியல், அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சப் கலெக்டர், ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வைக்கப்படும்.
வாக்காளர்கள் இணையதள தேடல் மையங்களின் மூலமாகவும், தேர்தல் ஆணைய இணையதளம் மூலமாகவும், தங்கள் விபரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப் பணி தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக கோரிக்கை மனுக்களை உரிய படிவத்தில், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலகங்களிலும் வழங்கலாம். இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க., செந்தில்குமார் எம்.எல்.ஏ., காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், தே.மு.தி.க., நல்லதம்பி உட்பட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

