/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
/
அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஜூலை 05, 2025 03:38 AM

கள்ளக்குறிச்சி: சுவாமி விவேகானந்தர் நினைவு நாளையொட்டி விளம்பார் அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சுவாமி விவேகானந்தர் நினைவு நாளையொட்டி, விளம்பார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பள்ளி வளாகத்தை சுற்றி 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், சமூக சேவை அறக்கட்டளையினர் உறுதிமொழி ஏற்றனர்.
நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை தலைவர் பெருமாள், செயலாளர், சந்திரசேகர், பொருளாளர் அன்பழகன், ஒருங்கிணைப்பாளர்கள் அரவிந்தன், குமரசேன், உறுப்பினர்கள் அசோக்குமார், வில்சன், முத்துராமன், செந்தில்குமார், குமார், சாதிக்பாஷா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.