/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
த.வெ.க., தலைவர் பிறந்தநாள் விழா
/
த.வெ.க., தலைவர் பிறந்தநாள் விழா
ADDED : ஜூன் 25, 2025 08:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட த.வெ.க., சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜி.அரியூரில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட செயலாளர் பரணி பாலாஜி தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் தமிழரசி ஏழுமலை கட்சிக் கொடியேற்றி, கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர் ராஜேஷ்குமார், நிர்வாகிகள் விஜி, விஜயகுமார், பிரேம் குமார், மதி, தினேஷ், ராகுல், வழக்கறிஞர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.