/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது பாட்டில் விற்ற இருவர் கைது
/
மது பாட்டில் விற்ற இருவர் கைது
ADDED : மார் 25, 2025 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மது பாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் கோட்டைமேடு பெரியாயி கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சித்தால் கிராமத்தை சேர்ந்த செல்வம் மனைவி சடையம்மாள், 40; கள்ளக்குறிச்சி ராஜிவ்காந்தி, 44; ஆகிய இருவரும் டாஸ்மாக் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்றது தெரிந்தது.
போலீசார், இருவரையும் கைது செய்து, 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.