/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் பொருட்கள் கடத்திய வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம்
/
ரேஷன் பொருட்கள் கடத்திய வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம்
ரேஷன் பொருட்கள் கடத்திய வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம்
ரேஷன் பொருட்கள் கடத்திய வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம்
ADDED : செப் 19, 2025 03:24 AM
கள்ளக்குறிச்சி: ரேஷன் பொருட்கள் கடத்திய வழக்கில் பறிமுதல் செய்த 11 வாகனங்கள் வரும் 26ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை கள்ளத்தனமாக கடத்திய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 11 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் வாகனத்தின் உரிமையாளர்கள் இதுவரை அபராத தொகையினை செலுத்தி வாகனங்களை பெற்று கொள்ள முன்வராததால் 11 வாகனங்களும் பொது ஏலம் விடப்படுகிறது.
விழுப்புரம் வழுதரெட்டி காந்தி நகர் பகுதியில் உள்ள குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு துறை அலுவலகத்தில் வரும் 26ம் தேதி காலை 11 மணிக்கு பொது ஏலம் நடக்கிறது. வாகனங்களை பார்வையிட கள்ளக்குறிச்சி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் 89406 96129 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வாகன விபரங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதளம் https://kallakurichi.nic.in என்ற முகவரியில் அறிந்த கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அன் றைய நாளில் காலை 9 மணி முதல் 10 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படும். கட்டணமாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். ஏலம் எடுத்தவுடன் உறுதி செய்த முழு தொகையையும் உடனடியாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் உள்ளது.

