/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊர்க்காவல் படை நியமனம் தாமதம் ஏன்? வன ஊழியர்கள்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊர்க்காவல் படை நியமனம் தாமதம் ஏன்? வன ஊழியர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊர்க்காவல் படை நியமனம் தாமதம் ஏன்? வன ஊழியர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊர்க்காவல் படை நியமனம் தாமதம் ஏன்? வன ஊழியர்கள்
ADDED : ஜூன் 24, 2025 08:02 AM
கோவில் திருவிழா, கட்சி பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், இரவு நேர ரோந்து மற்றும் தேர்தல் பணிகள், போக்குவரத்து சீரமைப்பு உட்பட பல்வேறு பணிகளில் போலீசார் பணிபுரிகின்றனர்.
போலீசாருக்கு உதவி செய்வதற்காக ஊர்க்காவல் படை வீரர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மாதம் 2,800 ஊதியமாக வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் 26 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், 146 பேர் விண்ணப்பித்தனர்.
கடந்த மே 19ம் தேதி நடந்த நேர்முகத் தேர்வில், விண்ணப்பதாரரின் உயரம், மார்பளவு சோதனை செய்யப்பட்டு, சான்றிதழ்கள் பெறப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் வழக்கு ஏதேனும் உள்ளதாக என ஆய்வு செய்யப்படும், விளையாட்டு வீரர்கள், சுருக்கெழுத்து பயிற்சி போன்ற கூடுதல் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கி தேர்வு செய்யப்படுவர் என போலீசார் தெரிவித்திருந்தனர்.
ஆனால், ஆளுங்கட்சி பிரமுகர்கள், அரசியல் நிர்வாகிகள் மற்றும் போலீசார் பலர் தங்களுக்கு வேண்டியவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களை தேர்வு செய்யுமாறு சிபாரிசு செய்துள்ளனர். அதிகளவிலான சிபாரிசுகள் பெறப்பட்டுள்ளதால், ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஊர்க்காவல் படை வீரர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.