/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
3 மகள்களுடன் மனைவி மாயம் கணவர் புகார்: போலீஸ் விசாரணை
/
3 மகள்களுடன் மனைவி மாயம் கணவர் புகார்: போலீஸ் விசாரணை
3 மகள்களுடன் மனைவி மாயம் கணவர் புகார்: போலீஸ் விசாரணை
3 மகள்களுடன் மனைவி மாயம் கணவர் புகார்: போலீஸ் விசாரணை
ADDED : ஜன 21, 2024 04:59 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே 3 மகள்களுடன் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருக்கோவிலுார் அடுத்த பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 38; இவரது மனைவி சிவகங்கை, 36; இவர்களுக்கு கீதா, 17; ஜனனி, 14; மோகனாஸ்ரீ, 11; ஆகிய 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
குடும்ப பிரச்னை காரணமாக கணவன் மனைவி பிரிந்து வசித்து வருகின்றனர். பிள்ளைகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
சிவகங்கை, பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகைக்கு அதே ஊரில் இருக்கும் தாய் குப்புவின் வீட்டிற்கு, விடுதியில் தங்கியிருந்த 3 மகள்களையும் அழைத்து வந்திருந்தார்.
கடந்த 17ம் தேதி ஊர் முக்கியஸ்தர்கள் பஞ்சாயத்து பேசி சிவகங்கை மற்றும் மகள்களை கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டிற்கு வந்தவர்கள், 18ம் தேதி அதிகாலை வெங்கடேசன் பார்த்தபோது, சிவகங்கை மற்றும் 3 மகள்களும் காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

