/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்; எஸ்.பி., அலுவலகத்தில் பரபரப்பு

UPDATED : செப் 20, 2025 07:38 AM
ADDED : செப் 20, 2025 06:56 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் பெண் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி அடுத்த மஞ்சப்புத்துாரைச் சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி ஜீவா, 42; இவர், நேற்று மதியம் 12:00 மணியளவில் எஸ்.பி., அலுவலகம் வந்தவர், திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
உடன், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, தண்ணீரை ஊற்றி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ராபர்ட்ஜான் என்பவர், தனது மகன் ரஞ்சித் பிரபாகரனுக்கு வெளிநாட்டில் மருத்துவம் பயில 'சீட்' வாங்கித் தருவதாக கூறி கடந்த 2023ம் ஆண்டு பணம் கேட்டார்.
இதை நம்பி 15.53 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், சீட் வாங்கித் தராமல் ராபர்ட்ஜான் ஏமாற்றியுள்ளார்.
இது குறித்து ஜீவா கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த மே மாதம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயன்றது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.