/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : ஜன 18, 2024 09:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், வரும் 23ம் தேதி, காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.
வேளாண், தோட்டக்கலை, கூட்டுறவு, வருவாய், வனத்துறை, வங்கி தொடர்பாக கோரிக்கை மற்றும் புகார் இருப்பின், இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தெரிவிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துஉள்ளார்.
மேலும், பிஎம் கிசான் திட்டத்தில் விடுபட்டுள்ள தவணை தொகையை விவசாயிகள் பெற, இ- - சேவை மையம் வாயிலாக, பிஎம் கிசான் இணையதளத்தில், ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

