/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இருங்காட்டுக்கோட்டையில் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை
/
இருங்காட்டுக்கோட்டையில் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை
இருங்காட்டுக்கோட்டையில் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை
இருங்காட்டுக்கோட்டையில் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 01, 2024 11:30 PM
இருங்காட்டுக்கோட்டை:ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து இருங்காட்டுக்கோட்டையில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் காவல் உட்கோட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம் ஆகிய மூன்று காவல் நிலையங்கள் உள்ளன.
இதில், ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலைய எல்லையில் இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற் பூங்கா அமைந்துள்ளன.
இதனால், இந்த காவல் நிலைய எல்லையில் பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வாடகை வீட்டில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் நெடுஞ்சாலை, தண்டலம் - தக்கோலம் நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் - ஒரகடம் நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் இந்த காவல் நிலைய எல்லையில் அமைந்துள்ளன.
இதனால், இங்கு விபத்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தொழிற்சாலைகளில் ஸ்கிராப் கழிவு பொருட்களை எடுப்பதற்கு ரவுடிகள், அரசியல் பிரமுகர்களிடையே போட்டா போட்டி நிலவுவதால் அடிக்கடி கொலைகள் அரங்கேறி வருகின்றன.
வெளி மாநில தொழிலாளர்கள் வருகையால் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள், கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளன.
நீண்ட எல்லையாலும், ஆட்கள் பற்றாக்குறையாலும் ஸ்ரீபெரும்புதுார் போலீசார் பணிச்சுமையால் அவதிக்குள்ளாகின்றனர்.
இருங்காட்டுக்கோட்டை சுற்றுப்புறத்தில் மக்கள் பெருக்கம், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.
எனவே, குற்றச் சம்பவங்களை தடுக்க இருங்காட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களை இணைத்து புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

