/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பராமரிப்பில்லாத வழிப்போக்கர் மண்டபம்
/
பராமரிப்பில்லாத வழிப்போக்கர் மண்டபம்
ADDED : ஜன 23, 2024 09:46 PM

குன்றத்துார்:ஸ்ரீபெரும்புதுார் - -குன்றத்துார் சாலையில், சோமங்கலம் அருகே, அமரம்பேடு பகுதியில் சாலையோரம் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழிப்போக்கர் மண்டபம் உள்ளது.
இதேபோல, குன்றத்துார் அரசு ஆண்கள் பள்ளி எதிரே கொல்லச்சேரி பகுதியில் பழமையான மண்டபம் இடிந்த நிலையில் உள்ளது.
வாகன போக்குவரத்து அதிகம் இல்லாத அந்த காலத்தில், இந்த சாலை வழியே வெகுதுாரம் செல்பவர்கள் மண்டபத்தில் ஒய்வெடுத்து சென்றுள்ளனர்.
பல அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் இந்த மண்டபம் எவ்வித பராமரிப்பும் இன்றி உள்ளது. பகல், இரவு நேரத்தில் மது அருந்தும் இடமாக இந்த மண்டபம் மாறிவிட்டது.
மண்டபத்தின் மீது மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மண்டபத்தை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

