/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து விழிப்புணர்வு
/
ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து விழிப்புணர்வு
ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து விழிப்புணர்வு
ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து விழிப்புணர்வு
ADDED : ஜன 20, 2024 11:15 PM
வாலாஜாபாத், தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி, கனரக வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, வாலாஜாபாதில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மத்திய அரசின் புதிய சட்ட முன்வடிவ மசோதாவை ரத்து செய்ய வேண்டும். விபத்து ஏற்பட்டால் வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்வதை நிறுத்த வேண்டும்.
சாலை விபத்தில் கை, கால்கள் இழக்கும் ஓட்டுனர்களுக்கு சுயதொழில் அமைக்க வட்டி இல்லா கடன் திட்டம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வகை ஓட்டுனர்கள் நல சங்கம் சார்பில், தமிழகம் முழுதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
எனினும், இப்போராட்டம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், பல இடங்களில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறது.
அவ்வாறு வாகனங்கள் இயக்கும் ஓட்டுனர்களிடம், நேற்று வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில், தமிழ்நாடு வாகன ஓட்டுனர் நல சங்கத்தினர், வேலை நிறுத்தம்குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கியும், வாகனங்களில் நோட்டீஸ் ஓட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

