/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
/
வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜன 23, 2024 06:01 AM

ஸ்ரீபெரும்புதுார் : சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதுார் போக்குவரத்து போலீசார் மற்றும் என்.டி.எல்., இண்டியா, டொயாட்சு பாரத் நிறுவனங்கள் சார்பில், ஒரகடம் மேம்பாலம் அருகில், வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் ஏ.எஸ்.பி.,உதயகுமார் தலைமை தாங்கி, வாகன ஓட்டிகள் கடைப்பிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனை வழங்கினார்.
அதை தொடர்ந்து, ஹெல்மெட் அணிந்தபடி வந்த, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி, போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
மேலும், தனியார் நிறுவன ஓட்டுனர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதுார் போக்குவரத்து ஆய்வாளர் ரவி, எஸ்.ஐ., மாணிக்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

