/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்மாற்றியை மறைக்கும் மரக்கிளை அகற்றப்படுமா?
/
மின்மாற்றியை மறைக்கும் மரக்கிளை அகற்றப்படுமா?
ADDED : ஜன 23, 2024 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர் :உத்திரமேரூர் ஒன்றியம், வேடபாளையத்தில் இருந்து, காட்டுப்பாக்கம் செல்லும் சாலையோரம், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு சீரான மின்சாரம் வழங்கும்வகையில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததால், மின்மாற்றியை சுற்றிலும் மரக்கிளைகள் புதர்போல மண்டியுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்தால், மரக்கிளைகள் மின்ஒயரில் உரசி மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, மின்மாற்றியை சுற்றிலும் புதர்போல படர்ந்துள்ள மரக்கிளையை அகற்ற மின்வாரியத்தினர்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

