/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுங்குவார்சத்திரம் -- தாம்பரம் நேரடி பஸ் சேவை துவக்கம்
/
சுங்குவார்சத்திரம் -- தாம்பரம் நேரடி பஸ் சேவை துவக்கம்
சுங்குவார்சத்திரம் -- தாம்பரம் நேரடி பஸ் சேவை துவக்கம்
சுங்குவார்சத்திரம் -- தாம்பரம் நேரடி பஸ் சேவை துவக்கம்
ADDED : ஜன 23, 2024 09:38 PM

ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார், மண்ணிவாக்கம் வழியாக, தாம்பரத்திற்கு நேரடி பேருந்து சேவையை, ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை துவங்கி வைத்தார்.
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் இருந்து நாள்தோறும் ஏராளமான பயணியர் தாம்பரம் மற்றும் சென்னையின் பல பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், சுங்குவார்சத்திரத்தில் இருந்து தாம்பரம் செல்ல, நேரடி பேருந்து வசதி இல்லை. இதனால், ஸ்ரீபெரும்புதுார் சென்று, அங்கிருந்து மற்றொரு பேருந்து பிடித்து பயணிக்க வேண்டிய சூழல் இருந்தது.
இந்த நிலையில், பயணியரின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து, சுங்குவார்சத்திரம் -- தாம்பரம் இடையே, தடம் எண்: 81-சி நேரடி பேருந்து சேவையை, ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சுங்குவார்சத்திரத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார், மணிமங்கலம், மண்ணிவாக்கம் வழியாக தினமும் தலா இரண்டு முறை இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து, காலை 6:00 மணி மற்றும் மாலை 6:00 மணி, சுங்குவார்சத்திரத்தில் இருந்து, காலை 7:30 மணி மற்றும் மாலை 7:30 மணி பேருந்த இயக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

