
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துவக்கப்பள்ளி அருகே வேகத்தடை வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம், கோடம்பாக்கம் கிராமத்தில் இருந்து, வெளிதாங்கிபுரம் கிராமம் வழியாக மின்னல் பகுதிக்கு பிரதான சாலை செல்கிறது.
இந்த சாலை ஓரம், கோடம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால், வாகன விபத்து அபாயம் உள்ளது.
எனவே, கோடம்பாக்கம் ஊராட்சி துவக்கப்பள்ளி அருகே, வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
-- கே.சேகர், நெமிலி.

