நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பரம்பாக்கம்:பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் ஊராட்சியில், ஆதிதிராவிடர் மக்களுக்கான சுடுகாட்டிற்கு செல்லும் பாதை கடந்த 150 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த சாலை தனியாருக்கு சொந்தமானது என கூறி, அவ்வழியை மறித்து சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை மீட்டுத்தரக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர், சுடுகாடு அருகே நேற்று முன்தினம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு நசரேத்பேட்டை போலீசார், பேச்சு நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.

