sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அடிப்படை பிரச்னைகளை கூட தீர்ப்பதில்லை தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

/

அடிப்படை பிரச்னைகளை கூட தீர்ப்பதில்லை தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

அடிப்படை பிரச்னைகளை கூட தீர்ப்பதில்லை தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

அடிப்படை பிரச்னைகளை கூட தீர்ப்பதில்லை தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:வாலாஜாபாத் பேரூராட்சி கூட்டத்தில், அடிப்படை பிரச்னை களை கூட தீர்ப்பதில்லை என தி.மு.க.,வினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சியில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு தி.மு.க., தலைவர் இல்லாமல்லி தலைமை வகித்தார்.

துணை தலைவர் சுரேஷ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரி வசூலிப்பாளர் சிவப்பிரகாசம் தீர்மானங்களை வாசித்தார்.



தி.மு.க., - அரிக்குமார்: பல்வேறு தெருக்களில் சாலை, கழிவுநீர் ஆகிய வசதிகள் இல்லாமல் உள்ளன. குடியிருப்புகள் இல்லாமல் இருக்கும், அங்கீகாரம் பெறாத வீட்டுமனை பிரிவு பகுதியில், 26 லட்ச ரூபாய் செலவில் ஏன் சிமென்ட் சாலை போட வேண்டும்.

செயல் அலுவலர் - லோகநாதன்: 2017ம் ஆண்டே அங்கீகாரம் பெறப்பட்டு உள்ளது. வீட்டு மனைப்பிரிவினர் வரியினங்களை செலுத்தி வருகின்றனர். அதனால், சாலை போட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க., - கலைவாணி: விளம்பரம் செய்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். விளம்பரம் தோடுவோர், தங்களின் சொந்த பணத்தில் தேடிக் கொள்ளலாம். பதவிக்கு வந்தவர்கள், சேவை மனப்பான்மையோடு சேவை செய்ய வேண்டும். சுய லாபம் அடைவதிற்கில்லை.

செயல் அலுவலர் - லோகநாதன்: வளர்ச்சி பணிகள் குறித்து தெரிய வேண்டும் என, விளம்பரம் கொடுக்கிறோம்.

தி.மு.க., - கலைவாணி: பேரூராட்சியில் தான்தோன்றி தனமாக சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த, அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்.



செயல் அலுவலர் - லோகநாதன்: மாட்டின் உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

தி.மு.க., - அரிக்குமார்: பஜாரில் மாடுகள் தான்தோன்றிதனமாக சுற்றி திரிகின்றன. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயல் அலுவலர் - லோகநாதன்: மாடு பிடிக்க அதிக பணம் செலவாகிறது. இருப்பினும், மாடு பிடித்து கோசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., தனசேகரன்: நான்கு நாட்களாக மின் விளக்கு எரியவில்லை. பேரூராட்சி ஊழியர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

செயல் அலுவலர் லோகநாதன்: சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறேன்.

வி.சி., - அசோக்குமார்: இருசக்கர வாகன நிறுத்தங்களில், தினசரி நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிற்கின்றன. வருவாய் மட்டும் குறைவாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. பேரூராட்சி ஊழியர் பெறும் சம்பளத்தை விட குறைந்த வருவாய் கிடைக்கிறதே?

செயல் அலுவலர் - லோகநாதன்: அரசு வசூலிக்கும் போது, குறைந்த வருவாய் வருகிறது. தனியார் வசூலிக்கும்போது அதிகமான பணத்தை வசூலிக்கி முடிகிறது. நாங்கள் என்ன செய்ய முடியும்.

ம.தி.மு.க., - சிவசங்கரி: கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும். சுகாதார கழிப்பறை கட்டடம் ஆகியவை பயன்பாட்டிற்கு வர வேண்டும் என, நான்கு மாதங்களாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

செயல் அலுவலர் லோகநாதன்: நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., துணை தலைவர் - சுரேஷ்குமார்: ஜே.சி.பி., வாகனத்திற்கு வழங்கிய நிதியில், ஒரு புதிய ஜே.சி.பி., இயந்திரமே வாங்கி விடலாம் போலிருக்கிறதே

செயல் அலுவலர் லோகநாதன்: எந்த நகர்ப்புற நிர்வாகத்திலும் சொந்த வாகனங்கள் வாங்குவதற்கு அனுமதி இல்லை.

தி.மு.க., - கருணாகரன்: நான்கு நாட்களாக தண்ணீர் வரவில்லை. கேட்வால்வு சரியாக திறப்பதில்லையா.

செயல் அலுவலர் - லோகநாதன்: சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் செய்து வருகிறோம். தடையின்றி வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., - வெங்கடேசன்: கோடைகாலம் துவங்கி இருப்பதால், தற்போது வினியோகிக்கும் தண்ணீரை கூடுதலாக அரை மணி நேரம் வினியோகம் செய்ய வேண்டும்.

தி.மு.க., - கலைவாணி: பேரூராட்சியில், நாய்கள், குரங்குகள் தொல்லையாக உள்ளது. புளுகிராசிடம் கூறி பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயல் அலுவலர் - லோகநாதன்: புளுகிராசிடம் புகார் அளித்தும், அவர்கள் வர தயக்கம் காட்டுகின்றனர்.

இவ்வாறு கவுன்சிலரகள் கூட்டத்தில் விவாதம் நடந்தது.




    • Dinamalar Events


    Dinamalar