/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பணி ஓய்வு நாளில் செயற்பொறியாளர் சஸ்பெண்ட்'
/
பணி ஓய்வு நாளில் செயற்பொறியாளர் சஸ்பெண்ட்'
ADDED : பிப் 02, 2024 12:00 AM
சென்னை:சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் நாத்டான், 60, வளசரவாக்கம் மண்டலத்தில் பணி புரிந்தார்.
நேற்றுமுன்தினம் ஓய்வு பெற இருந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை 3:00 மணிக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்காக உத்தரவை, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் நடந்த குற்றச்சாட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நிலுவையில் இருப்பதால், நாத்டான் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பணி ஓய்வு நாளில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் இதர பொறியாளர்கள் 110 பேர், கமிஷனர் ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்தனர்.
அப்போது, பணியில் இருக்கும்போது விசாரணை செய்யாமல், அதையே காரணம் காட்டி, ஓய்வு நாளில் பணி இடைநீக்கம் செய்திருப்பது வருத்தம் அளிப்பதாக அவர்கள் முறையிட்டனர்.

