/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காட்டு பன்றிகளால் சேதமாகும் நெற்பயிர் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
/
காட்டு பன்றிகளால் சேதமாகும் நெற்பயிர் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
காட்டு பன்றிகளால் சேதமாகும் நெற்பயிர் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
காட்டு பன்றிகளால் சேதமாகும் நெற்பயிர் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
ADDED : ஜன 23, 2024 09:44 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:
வேளாண் விற்பனை மையங்களில் விற்கப்படும் விதை நெல்லுக்கு உரிய ரசீது கொடுப்பதில்லை. முளைப்பு திறன் இல்லாத நெல் பல்வேறு இடங்களில் கிடைக்கிறது.
● வேளாண் சுற்றுலா செல்ல, ஒவ்வொரு ஆண்டும் ஒரே விவசாயிகளை அதிகாரிகள் அழைத்து செல்கின்றனர். மற்ற விவசாயிகளையும் அழைத்து செல்ல வேண்டும்
● விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்களுக்கு, அதிகாரிகள் பதில் அளிப்பதில்லை; கடிதமும் அனுப்புவதில்லை
● தொடூர் ஏரிக்கரையின் கரை, மதகு, கால்வாய் போன்றவை சீரமைக்க வேண்டும்
● காஞ்சிபுரம் அருகேயுள்ள நத்தப்பேட்டை ஏரியில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் கழிவுநீர் கலந்து மோசமான நிலையில் உள்ளது. விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது
● வாலாஜாபாத் வட்டாரம், புதுப்பாக்கம் சித்தேரியை சீரமைக்க, 44 லட்சம் ரூபாய் மதிப்பில், நீர்வள ஆதாரத்துறை மதிப்பீடு தயாரித்தும், ஏரியை சீரமைக்காமல் உள்ளனர்
● நெற்பயிர்களை சேதமாக்கும் காட்டு பன்றிகளை வனத்துறை சுட வேண்டும். அதனால் ஏற்படும் பயிர் பாதிப்புகளை, வனத்துறை கொடுக்கும் இழப்பீடுகளால் சரி செய்ய முடிவதில்லை.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கூட்டுறவுத் துறை இணை பதிவாளர் ஜெயஸ்ரீ உட்பட பலர் பங்கேற்றனர்.

