/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிப். 2௴ல் ஊராட்சி பணியாளர் போராட்டம் நடத்த முடிவு
/
பிப். 2௴ல் ஊராட்சி பணியாளர் போராட்டம் நடத்த முடிவு
பிப். 2௴ல் ஊராட்சி பணியாளர் போராட்டம் நடத்த முடிவு
பிப். 2௴ல் ஊராட்சி பணியாளர் போராட்டம் நடத்த முடிவு
ADDED : ஜன 20, 2024 11:15 PM
உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், உத்திரமேரூரில் நடந்தது.
சங்கத்தின் காஞ்சிபுரம்மாவட்ட தலைவர் அமரேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம், மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம்.
ஊராட்சி செயலர்களுக்கு அரசு பணியாளர்களுக்கு பொருந்தும் விடுப்பு விதிகள் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகம் முன், பிப்., 2ல் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட ஊராட்சி பணியாளர்கள் பங்கேற்க செய்வது என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

