/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பளு துாக்கும் இயந்திரம் மோதி பெண் ஊழியர் உயிரிழப்பு
/
பளு துாக்கும் இயந்திரம் மோதி பெண் ஊழியர் உயிரிழப்பு
பளு துாக்கும் இயந்திரம் மோதி பெண் ஊழியர் உயிரிழப்பு
பளு துாக்கும் இயந்திரம் மோதி பெண் ஊழியர் உயிரிழப்பு
ADDED : ஜன 23, 2024 09:49 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, தொழிற்சாலையில் பணியாற்றிய போது, பளுத்துாக்கும் இயந்திரம் மோதியதில், பெண் ஊழியார் பலியானார்.
காஞ்சிபுரம் அடுத்த, விஷார் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா, 33. இவரது கணவர் காலமான நிலையில், இரு மகள்களுடன் வசித்து வந்தார்.
இவர், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, பிள்ளைபாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக பளுத்துாக்கும் இயந்திரம் சங்கீதா மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சக ஊழியர்கள் அவரை, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

