/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் இஞ்சி விலை சரிவு கிலோ ரூ.120க்கு விற்பனை
/
காஞ்சியில் இஞ்சி விலை சரிவு கிலோ ரூ.120க்கு விற்பனை
காஞ்சியில் இஞ்சி விலை சரிவு கிலோ ரூ.120க்கு விற்பனை
காஞ்சியில் இஞ்சி விலை சரிவு கிலோ ரூ.120க்கு விற்பனை
ADDED : ஜன 13, 2024 11:04 PM

காஞ்சிபுரம்:தமிழகத்தில் ஓசூர், ஊட்டி, குன்னுார், கூடலுார், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களிலும், கேரள மாநிலத்திலும், இஞ்சி பயிரிடப்படுகிறது. இதில், கேரளா மாநிலத்தில் விளையும் இஞ்சி, காஞ்சிபுரம் சந்தைகளுக்கு அதிகளவு வரவழைக்கப்படுகிறது.
கேரளா மாநிலத்தில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு இஞ்சி வரத்து வெகுவாக குறைந்ததால், மூன்று மாதங்களுக்கு மேலாக கிலோ இஞ்சி 250 ரூபாய் விற்கப்பட்டு வந்தது.
தற்போது, கேரளாவில் விளைச்சல் அதிகரித்து, காஞ்சிபுரத்திற்கு இஞ்சி வரத்து அதிகரித்தள்ளதால், கிலோவிற்கு 130 ரூபாய் குறைந்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் சந்தையில் கிலோ இஞ்சி 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல, வரத்து குறைவால், இரு மாதங்களாக கிலோ பச்சை மிளகாய் 150 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து பச்சை மிளகாய் வரத்து அதிகரித்து உள்ளதால், கிலோவிற்கு 90 ரூபாய் வரை குறைந்து, முதல் தரமான பச்சை மிளகாய் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என, காஞ்சிபுரம் ரயில்வே சாலை, ராஜாஜி மார்க்கெட் இஞ்சி, பச்சை மிளகாய் வியாபாரி மணிகண்டன் தெரிவித்தார்.

